aஉலகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டம்!

public

ஜல்லிக்கட்டின் மீதுள்ள தடையை நீக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர்ந்து பல நாட்களாக போராட்டங்கள் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா என பல கண்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தங்கள் ஆதரவை தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சுவிடன்

தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்கு உணர்வுப் பூர்வமாக சுவீடனில் வாழும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சுவீடன் தமிழ் சொந்தங்கள் காலை 10.45 மணியளவில் பிருன்ஸ்பர்க்” சதுக்கத்தில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக “கோட்டாப்ளட்சென் கலாச்சார மையம்” நோக்கி பேரணியாக சென்றனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தங்களது கலாச்சார உணர்வை தமிழக மக்களுக்கு தெரிவிப்பதற்காக இந்த பேரணி என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் வசித்து வரும் தமிழர்கள் அங்குள்ள வெம்பிளி அரங்கில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைப்பெற்றது.

அதேபோல் நாளை கேம்பிரிஜ் பகுதியிலும் ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவிக்க இருக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். மேலும், இங்கிலாந்து நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி முறையில் பல்வேறு வகையில் தங்களது உணர்வுகளைக் காட்டி வருகின்றனர்.

அயர்லாந்து

அயர்லாந்தில் வாழும் தமிழர்கள், அந்நாட்டு தலைநகரான டப்ளின் மாநகரில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களும், தமிழர்களின் கலாசாரம் மற்றும் ஜல்லிக்கட்டுத் தடைக்கு பின்புலமாக உள்ள அரசியல் விழிப்பு உணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

சாதி மத பேதமின்றி குடும்பத்தோடு ஓரணியாகத்திரண்டு தாய் தமிழ் நாட்டில் போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றும், காவிரி நதி நீர் மற்றும் தமிழ் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்னைகளில் மத்திய மாநில அரசுகள் நிரந்தரத்தீர்வு காணவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதையடுத்து, அயர்லாந்தில் வாழும், தமிழர்களின் கையொப்பம் அடங்கிய மனு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வழங்கப்பட்டது.

இலங்கை – மட்டக்களப்பு

இன்று மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

கொழும்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் எனவும், பீட்டா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தை போலவே இலங்கையில் நடந்த போராட்டத்திலும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

கத்தார்

கத்தார் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் காளை படம் பொறித்த பத்திரிகைகளுடன் பலர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

துபாய்

துபாயில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது . ஆனால் முதல் முறையாக வரலாற்றிலேயே துபாய் அரசு ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தமிழர்களின் ஆர்பாட்டத்திற்க்கு ஜபீல் பார்க்கில் இன்று அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி

தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக டெல்லியில் தமிழ் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மும்பை

மும்பையில் ஏராளமான இளைஞர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கோவா

கோவா மாநில தலைநகர் பானாஜியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ஆதரவாளர்கள், நாட்டு இன மாடுகளின் நன்மைகள் குறித்த பத்திரிகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *