இங்கிலாந்தில் ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்பு!

public

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா அம்மை நோய் பரவல் வேகம் எடுத்து வருகிறது. இந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து தற்போது 1076ஆக பதிவாகியுள்ளது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆப்பிரிக்காவில் மட்டும் கண்டறியப்பட்ட இந்த நோய் இந்த ஆண்டு ஐரோப்பிய மற்றும் பல நாடுகளுக்கு பரவியது. இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 1500ஐ தாண்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என்று கூறப்படுகிறது. இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் யாருக்காவது தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு தனது பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு கழகத்தின் இயக்குனர் சோபியா மக்கி கூறுகையில், “இங்கிலாந்தில் கொரோனா அம்மை நோய் பாதிப்பானது ஆயிரத்தை கடந்து விட்டது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தங்களை சுத்தமாக வைத்துக் கொண்டால் இந்த நோயிலிருந்து தப்பலாம். மேலும் புதிய நபர்களுடன் பாலியல் உறவு மேற்கொள்ளும் பொழுது மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *