பாகிஸ்தானில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்

public

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அங்கு எரிபொருள், உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாகிஸ்தானில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பாகிஸ்தானில் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 435 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் முன்பு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜாவேத் அக்ரம் கூறுகையில், “கொரோனா தொற்று ஒரு ரோலர் கோஸ்டர் போல செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. தற்போது பாகிஸ்தானில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. இந்தக் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால், தடுப்பூசிகள் அதன் செயல்திறனை இழந்து விட்டன.” என்று தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *