நார்வே: இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு!

public

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலையில் நார்வே நாட்டின் இரவு நேர கேளிக்கை விடுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் ஒரு இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காண பலரும் கூடும் வழக்கம் உண்டு. இந்நிலையில் வழக்கம் போல இந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்பொழுது கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மக்கள் அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து சில நிமிடங்களில் தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அந்த நபரிடம் தற்போது கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக நடந்த துப்பாக்கிச் சூடு நார்வே நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *