சென்னையில் இன்று (மே 20) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (மே 19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,850 க்கும், ஒரு சவரன் ரூ.54,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.6,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.7,370 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,960 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.97.50க்கும், ஒரு கிலோ ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.3.50 காசுகள் உயர்ந்து ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,500 உயர்ந்து ரூ.1,00,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விமர்சனம் ; ’குருவாயூர் அம்பலநடையில்’!
ஹெலிகாப்டர் விபத்து – இரான் அதிபர் பலி : பிரதமர் மோடி இரங்கல்!