dதெற்காசியாவின் சிறந்த விமான நிலையம்!

public

ண்டுதோறும் ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம் வெளியிடும் உலகின் சிறந்த விமான நிலையங்கள் குறித்த தரவரிசையில், தெற்காசியாவில் சிறந்த விமான நிலையமாக பெங்களூருவில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா இந்த வருடம் பாரிசில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூருவின் கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விருது, விமான நிலையத்தில் வாடிக்கையாளர்களுக்கான சேவை, நுழைவு வாயிலில் உள்ள சோதனை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள், எளிதான வழிமுறைகள், சுத்தம் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறை போன்ற பல கூறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பெங்களூரு விமான நிலையம் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. அந்த பதிவில், “இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எங்களின் கடின உழைப்பைப் பாராட்டி எங்களுக்காக வாக்களித்த பயணிகளுக்கு நன்றி.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த உலகின் சிறந்த விமான நிலையங்கள் குறித்த தரவரிசையில், உலகிலேயே சிறந்த விமான நிலையமாக கத்தார் நாட்டின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்துக்கு சிறந்த பணியாளர்களைக் கொண்ட விமான நிலையம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அணுகுவதற்கு எளிதான விமான நிலையத்திற்கான விருதை துருக்கியின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் தட்டிச்சென்றது. மேலும் தூய்மையான விமான நிலையத்திற்கான விருதுக்கு ஜப்பானின் டோக்கியோ சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *