காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 2ஆவது இடம்

public

மனித வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் காற்றின் தரம் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மாசு கொண்ட நாடுகளில் பங்களாதேஷ் நாடு முதலிடம் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா முதல் அலை தாக்கிய போது இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டாலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தியாவில் இதற்கு தொழிற்சாலைகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

உலகளவில் உள்ள காற்று மாசுவை மதிப்பிடுகையில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரி 2.2 ஆண்டுகள் குறையும். மேலும் இந்தியாவில் இது தொடர்ந்து நீடித்தால் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்தில் ஐந்து ஆண்டுகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளில் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று தெற்காசிய நாடுகளும் தான் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்காளம் வரை நீளும் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மோசமான காற்று மாசு கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காற்று மாசினால் சராசரி 7.6 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் ஒரு மதிப்பீட்டின் படி இந்தியாவில் டெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்சினை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *