உத்தரப்பிரதேசத்தில் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் 5 வயது சிறுமி!

public

முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது குரங்கு அம்மை நோய். தற்போது இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இரண்டு வருடங்கள் கழித்து உலகளவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர் ஆனால் சில நாட்களிலேயே இந்த குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்த தொடங்கியது.

ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இதுவும் கொரோனா போல ஒரு பெரும் தொற்றை உருவாக்கி அனைவரும் மீண்டும் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்படலாம் என்று மக்கள் அச்சப்பட தொடங்கினர். இந்தக் குரங்கு அம்மை நோய் கொரோனா பெருந்தொற்று போல உலகம் முழுவதும் பரவ வாய்ப்பில்லை என்று உலக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் இது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து மட்டுமே பரவும். இருப்பினும் இந்தக் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருப்பவர்கள் தீவிர வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுத்தமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இந்த குரங்கு அம்மை நோய் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 5 வயது சிறுமி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவளை பரிசோதித்த டாக்டர்கள் அவளுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் தான் அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய முடியும். இந்த சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *