சீரம் உற்பத்தி ஆலை ஆப்பிரிக்காவில் அமைப்பு!

public

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அதன் முதல் உற்பத்தி ஆலையை ஆப்பிரிக்காவில் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொற்றுநோயின் மோசமான கட்டங்களில்கொரோனா தடுப்பூசிகளுக்கான சொந்த உற்பத்தி திறன் இல்லாத ஒரே கண்டம் ஆப்பிரிக்காவாகும், இது சீரம் உட்பட வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சீரம் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்றத்தில் பேசுகையில், “தென்னாப்பிரிக்கா, ருவாண்டா போன்ற நாடுகளில் தனது திட்டங்களைப் பற்றி விவாதிக்க சில ஆப்பிரிக்க அதிகாரிகளை டாவோஸில் சந்திக்கிறேன். சாத்தியமான முதலீட்டு திட்டங்களுக்கு பொதுவாக குறைந்தது 300 மில்லியன் டாலர்கள் தேவைப்படும்.” என்றார்.

மேலும் குரங்கு அம்மை வழக்குகளின் அதிகரிப்பு குறித்து கேட்டதற்கு, “ குரங்கு அம்மை நோய் அவ்வளவு பரவக்கூடியதாக தெரியவில்லை. நாங்கள் அதற்கு தடுப்பூசி தயாரிக்கும் அனுமதியை பெற்றாலும், காத்திருந்துதான் முடிவெடுப்போம்” என்று கூறினார்.

குரங்கு அம்மை பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்த நோய் பொதுவாகக் கண்டறியப்படாத நாடுகளில் பரவ தொடங்கியுள்ளதால், இது ஒரு பெரும் தொற்று நோயாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் சில வாரங்களில் குரங்கு அம்மை தொற்று சில நாடுகளில் வேகமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனம் 1.5 பில்லியனுக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது, மேலும் ஒரு மில்லியனுக்கு அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை சுமார் 300 மில்லியன் டோஸ்கள் தயாரித்து விற்கும் திட்டத்தையும் சீரம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *