தேசிய டெங்கு தினம்: ஆண்டுக்கு 400 மில்லியன் பாதிப்புகள்

public

ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி, தேசிய டெங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. டெங்கு பரவும் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடங்கியுள்ளது. கடுமையான டெங்குவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழக்கும் அபாயம் அதிகம். ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 400 மில்லியன் டெங்கு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, சுமார் 96 மில்லியன் பேர் கடுமையான டெங்கு தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பாதிப்புகள் உலகின் வெப்பமண்டல பகுதிகளில் நிகழ்கின்றன.

காய்ச்சல், உடல் வலி, ஆகிய அறிகுறிகள் தான் முதலில் வரும் ஆனால் இந்த அறிகுறிகள் மற்ற தொற்று வகையான நோய்களுக்கும் வரும். டெங்கு நோய்த்தொற்றுக்கு பிறகு நான்கு முதல் ஆறு நாட்களுக்குப் பிறகு தோன்றி பத்து நாட்கள் வரை நீடிக்கும் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, கண்ணின் பின்புறம் வலி, மூட்டு, தசை வலி, உடல் சோர்வு, வாந்தி ஆகியவை ஆகும்.

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவும் என்பதால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த கொசுக்கள் பெரும்பாலும் வாளிகள், கிண்ணங்கள், விலங்கு உணவுகள், பூந்தொட்டிகள் மற்றும் குவளைகள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் முட்டையிடும். ஆகையால் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது, டெங்குவுக்கு எதிரான முதல் ஆயுதம். கடுமையான டெங்கு காய்ச்சல் வரும்போது கிளினிக் அல்லது மருத்துவமனையில் தீவிரமான மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது, இல்லையேல் அது உயிரிழப்புகளில் போய் முடியும். ஆகையால் காய்ச்சல் வந்தால் முன்னெச்சரிக்கையாக பரிசோதித்து பார்த்துக் கொள்வது நல்லது.

ஏற்கனவே டெங்குவால் பாதிக்கப்பட்ட 9 முதல் 16 வயதுடைய இளம் பருவத்தினருக்கு இந்த நோயைத் தடுக்க உதவும் டெங்வாக்ஸியா என்ற தடுப்பூசியை எப்டிஏ 2019ஆம் ஆண்டில் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *