xபோக்குவரத்து விதிமீறல்: போன் போட்டு பண வசூல்

public

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் அபராத வசூல் முறை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனை சரிசெய்ய சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர்.

இதன்படி சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், கடந்த 11ஆம் தேதி 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார். கடந்த 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் முதல் 11 நாட்களில் 10 அழைப்பு மையங்களில் மொத்தம் 2389 தொலைபேசி அழைப்புகள் செய்து சாலை விதிகளை மீறுபவர்களிடம் போலீசார் பண வசூலில் ஈடுபட்டனர். இப்போது நிலுவையில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிவித்ததுடன், அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. இல்லையெனில் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் கடந்த 11 நாட்களில் 55,885 வழக்குகளில் மொத்தம் 1 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 542 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் பெறப்பட்டுள்ளது. 100 முறைக்கு மேல் விதி மீறலில் ஈடுபட்ட 9 வாகன உரிமையாளர்களிடம் இருந்து 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க சிறப்பு தணிக்கை தொடங்கப்பட்டு 197 வழக்குகளில் மொத்த அபராதமாக 19 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகன நிறுவன உரிமையாளர்கள் தங்கள் அனைத்து வாகனங்களுக்கும் நிலுவையில் உள்ள அபராதம் செலுத்த முன்வந்துள்ளனர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *