tகிறிஸ்தவ முறைப்படி மாணவன் உடல் நல்லடக்கம்!

public

சென்னையில் பள்ளி வேன் மோதி உயிரிழந்த இரண்டாம் வகுப்பு மாணவனின் உடல் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று(மார்ச் 28) காலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதி ஏழு வயதான தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மாணவனின் உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாணவனின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்கப்பட்டு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வளசரவாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்வதற்காக உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவனுக்கு பிடித்த சாக்லேட்டுகளுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடலை அடக்கம் செய்யும்போது, பாடல் பாடி, சிறுவனின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்த பின்பு, தாய், தகப்பனை மாணவன் உடல் மீது மண்ணை அள்ளி போட சொன்னார். அப்போது, மாணவனின் தாயார்,” எப்படிடா உன் மேல மண்ணை போடுவேன்…எழுந்து வாடா….என்னை மன்னிச்சிருடா…..உனக்கு இப்படி நடக்கும்னு தெரியலை…” என்று கதறி அழுதார். முன்னதாக, பெற்றோர் இருவரும், மாணவனின் உடலை கட்டிபிடித்து இறுதியாக முத்தம் செய்தனர். இந்த காட்சி காண்போரின் கண்களை கலங்க வைத்தது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாணவனின் தாய் ஜெனிபர், “நான் கிறிஸ்டியன். எனது கணவர் இந்து. என் பையன் இரண்டு மதத்தையும் விரும்புவான். ஆனால் இயேசுவை தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் விருப்பப்படி, உடலை கிறிஸ்தவ முறைப்படி புதைக்கலாம் என்று அருகிலுள்ள ஆர்சி சபையிடம் கேட்ட போது, நீங்கள் சந்தா கட்டவில்லை அதனால் புதைக்க இடம் தர முடியாது என கூறிவிட்டார்கள். பின்னர், சிஎஸ்ஐ சபையை அணுகியபோது, நீங்கள் சிஎஸ்ஐ சபையை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கிவாருங்கள். அப்படிவந்தால், இடம் தருகிறோம் என்றனர்.
குழந்தை சடலத்தை வைத்துக்கொண்டு நான் மதுரைக்கு சான்றிதழ் வாங்க செல்லவேண்டுமா? இப்படி சொல்ல உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்லையா.? நானும் கிறிஸ்டியன்தான். ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எதற்கு கிறிஸ்டியன் என்று சொல்லவேண்டும். நாங்கள் ஊர் ஊராக பணிக்காக டிரான்ஸ்பர் ஆனாம். ஆனால், இப்படி ஒரு கட்டத்தில் கூட கிறிஸ்தவ சபைகள் உதவ மறுத்தது வேதனையளிக்கிறது. இந்த மதமே வேண்டாம்” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

இதையடுத்து, உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சிறுவனின் உடலை வளசரவாகத்தில் உள்ள கல்லறையில் புதைக்க இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *