போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் செயின் பறிப்பு!

Published On:

| By Balaji

பட்டப்பகலில் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு எதிராக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் செல்வ மெரின். இவர் வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 25) வேலைக்குச் செல்வதற்காக விடுதியில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அவர் காவல் ஆணையர் அலுவலகம் எதிரே வந்து கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் எதிர் திசையில் வந்த இருவர் செல்வ மெரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வ மெரின், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் செல்வ மெரினிடம் இருந்து கொள்ளையர்கள் செயினைப் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

காவல் ஆணையர் அலுவலகம் எதிரிலேயே பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share