^யுபிஎஸ்சி எழுதும் முதல் திருநங்கை!

public

மூன்றாம் பாலித்தனவர்களுக்கு சட்டமும் உரிமையும் இருக்கின்றபோதும், அவர்கள் கடுமையான பாகுபாடு மற்றும் சட்ட ரீதியான தொந்தரவுகளைச் சந்தித்துவருகின்றனர்.

உச்ச நீதிமன்றம், 2014ஆம் ஆண்டில், மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் உரிமையும், அவர்களுக்கென்று தனியாக விண்ணப்பங்களில் ‘பிற’ பிரிவை ஏற்படுத்தவும் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு இந்தியாவின் பல பகுதிகளில் நடைமுறைக்கு வராமலே இருக்கின்றது.

வங்காளத்தைச் சேர்ந்த 28 வயதான திருநங்கை அத்ரி கார், அவரது அடிப்படை உரிமைகளைப் பெற முடியாத காரணத்தினால் விரக்தியடைந்தார். மேற்கு வங்க சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதுவதற்குப் பல போராட்டங்களைப் போராடியுள்ளார். சமீபத்தில், வங்காளத்தில் அத்ரி விண்ணப்பத்தில் ‘பிற’ பிரிவைப் பயன்படுத்தும் முதல் திருநங்கையாக மாறினார். இதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின.

இவருக்கு சிலர் உதவி செய்துள்ளனர். தனியார் பயிற்சி மையம் ஒன்று அத்ரி தேர்வுக்குத் தயாராகும் வகையில் அவருக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கியுள்ளது.

இவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை வலுவாக இருந்ததால், அவர் நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும், 2017ஆம் ஆண்டில், அத்ரியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும் வகையில் அடையாளம் தெரியாத ஒருவர் நீதிபதிக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அத்ரி வேறு வழியில்லாமல் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டார்.

இந்த ஆண்டும்,விளம்பரங்களில் ஆண்/பெண் என்ற இரு இடங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தன்னம்பிக்கை கொண்ட அத்ரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகி தீர்ப்புக்கு நன்றி சொன்னார். ஏனெனில் ஆன்லைனில் 2018 விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

ஜூன் 3ஆம் தேதி, ‘பிற’ பிரிவின் கீழ் தேர்வில் எழுதுவது, ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார் அத்ரி கார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *