மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் சடங்குக்குத் தடை!

public

fகேரளாவில் மனித ரத்தத்தால் காளிக்கு அபிஷேகம் செய்யும் சடங்குக்கு நேற்று முன் தினம் (மார்ச் 7) தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா என்ற பகுதியில் தேவியோடு ஸ்ரீவிதாவுரி வைத்யனாதா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள காளி சிலைக்கு மனித ரத்தத்தால் அபிஷேகம் நடத்த மக்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் எனக் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கோயிலில் கலியூட்டு மகாஉத்சவம் விழா (காளிக்கு உணவளிக்க பெரும் திருவிழா) மார்ச் 11ஆம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறவுள்ளது. மார்ச் 12, இரண்டாவது நாள் விழாவின்போது மாலை 6 மணிக்கு மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும். மக்கள் ரத்தத்தைத் தானமாக வழங்க விரும்பினால், அரசு அங்கீகரித்த மருத்துவர்கள் பாதுகாப்பாக ஊசியின் மூலம் சிறிதளவு ரத்தத்தை எடுத்துக்கொள்வார்கள் என கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், இந்த சடங்கைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *