பிரியாணி சமத்துவத்தின் அடையாளம் :அப்டேட் குமாரு

public

இந்த பிரியாணி பிரச்சினையெல்லாம் நேத்தே முடிஞ்சிடும்னு பாத்தா, இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியலை. ஃபுல்லா பிரியாணியை வெட்டுன ஏதோ ஒரு குரூப், சும்மா இருக்க முடியாம, சீரக சம்பா பிரியாணி கெத்தா இல்ல பாசுமதி அரிசி பிரியாணி கெத்தானு ஒரு டாபிக்கை எடுத்து உள்ளபோட, இந்த தப்பு பெருசா இல்ல பேண்ட் பெருசாங்கிற லெவல்ல உருண்டு புரண்டு சண்டை போட்டிக்கிட்டு கிடக்காங்க இந்த நெட்டிசன்ஸ். இந்த டிபேட்தான் இப்போ உலக லெவல்ல சுத்திகிட்டு இருக்குது. அதிமுகவா-திமுகவா, கமலா-ரஜினியா, விஜய்யா- அஜித்தான்னுதான் வழக்கமா களமாடிக்கிட்டு இருப்பீங்க. அட்லீஸ்ட் மெஸ்ஸியா-ரொனால்டோவானு இப்ப சண்டை போட்டிருந்தா கூட, சரி ஏதோ ட்ரெண்டிங்னு நினைச்சு ஏத்துக்கலாம்.. ஆனா இப்படி சீரக சம்பாவா- பாசுமதி அரிசியாங்கிற லெவல்ல கொண்டுவந்து விடுவீங்கனு கனவுலயும் நினைக்கல மக்களே… ஆமா, சீரக சம்பாவா பாசுமதியானு சண்டை போடுறீங்களே ரம்ஜான் லீவுல மொத்த ஹோட்டலையும் மூடிட்டு ஊருக்கு போயிட்டாங்க. எந்த அரிசியா இருந்தாலும் பரவாயில்லை அட்லீஸ்ட் வொயிட் ரைஸாவது கிடைக்குமானு கடை கடையா தேடிக்கிட்டு இருக்கான் இந்த அப்டேட் குமாருங்கிறது உங்களுக்கு தெரியுமா? ஹ்ம்ம்ம்.. உங்களுக்கு எங்க அதுலாம் தெரியப் போகுது. வெஜ்-நான் வெஜ் இருக்க ஹோட்டல்ல வெஜிடபுள் பிரியாணியை செஞ்சுட்டு, பீஸ் போட்டா பிரியாணி, இல்லைன்னா பிரிஞ்சின்னு விக்குறாங்களேன்னு யோசிச்சு, வெறும் குஷ்காவை வாங்கி பிரிஞ்சின்னு பேப்பர்ல எழுதி பக்கத்துல வெச்சு சாப்பிட்டுட்டு வந்த பாவமெல்லாம் என்னை சும்மா விடாது. நீங்க அப்டேட்டை படிங்க, நான் தயிர்சாதம் சாப்பிட்டுட்டு வர்றேன்

**K Arun Kumar**

அடிக்கமாட்டேன் ஓடாத அடிக்கமாட்டேன் பக்கத்துல வாடா அப்டினு சொல்லும்போதுலாம் நம்பிக்க அதானே எல்லாம்னு கல்யாண் பிரபு மாதிரி நினச்சிட்டு பக்கத்துல போவேன். ஆனா

கொஞ்சம்கூட சொன்ன வாக்க காப்பாத்தாம…

தந்தையர் தின வாழ்த்துக்கள் .

**தஞ்சை சத்யா**

அம்மாவோட அன்பு மோடி மாதிரி பிரபலமா தெரிஞ்சாலும்

அப்பாவோட அன்பு அமித்ஷா மாதிரி உள்ளுக்குள்ளயே இருக்கும்…

#தந்தையர் தின வாழ்த்துக்கள்…

**தெரன்ஸ் ஜேம்ஸ்**

எங்களுக்கு நல்ல ரோடு போடுங்கனு தமிழ்நாடு புல்லா மக்கள் கேட்குராங்க.. ஆனா போட்டா சேலத்துக்கு தான் போடுவேன்னு கவுர்மண்டூ ஒத்த கால்ல நிக்குது

**Joseph Anto**

விஜய் அவார்ட்ஸ்ல இந்த ஹரிஷ் கல்யான் காலா பாட்டுக்கு ஆடுறத பார்க்குற அப்போ தயிர் சாதமே உயிர் கொண்டு ஆடுற மாதிரி இருக்கு.

இத சொன்னா பொறாமைபாங்க…

**சாயப்பட்டறை**

முன்னாடிலாம் பட ரிலீஸுக்குதானேயே போஸ்டர் அடிச்சீங்க..? இப்ப என்ன படத்தை டிவியில போடுறதுக்குலாம் போஸ்டர் அடிக்குறீங்க… அதுவும் ஏற்கனவே டிவியில போட்ட ஒரு படத்துக்கு… #மெர்சல்

**புயல் காத்து**

எல்லாரும் குறும்படம் எடுத்துட்டு சினிமாவுக்குள்ள வருவாங்க. ஆனா சினிமாவுக்கு வந்த பிறகு குறும்படம் எடுத்து வெளிய விடுறவர்னா அது நம்ம ஆண்டவர்தான்

துப்புசிக்கு துப்பு சிக்கு பிக்பாஸ்

**மகிழி மான்**

தமிழக நீர்வள நிலவளத்திட்ட பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய மிக்ஸர், காபி செலவு ரூ 47 கோடி – செய்தி

ஆனாலும் மிக்ஸர்தான் சாப்பிட்டோம்ங்கிறதை ஒத்துக்கிறதைப் பாராட்டிதான் ஆகணும்

**Siva Kumar**

பேஸ்புக்ல என்ன எழவு நல்லது நடக்குதோ இல்லையோ அப்பா, அம்மா தினத்துகாச்சும் கூட சேர்த்து நின்னு போட்டோ எடுத்து போட்டுறானுங்க…நாரயாணா குளிக்கறயோ இல்லையோ பட்டை நாமம் நல்லா இருக்கு மொமண்ட்!!!

**Sashi Kha**

எப்போதும் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அல்ல

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றி…….!!!!!!!!

-லாக் ஆஃப்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *