பியூட்டி ப்ரியா: கண்களுக்கான மேக்கப்பும் பிரான்ஸ் பியூட்டியும்!

public

கொஞ்சம் டார்க் டஸ்கி சருமத்துக்கு ஏற்ற கண் மேக்கப்:

உங்கள் தோலின் நிறத்திற்கு ஏற்ற நிறங்களை பயன்படுத்த வேண்டும். உங்கள் பவுண்டேஷன் பிங்காக இல்லாமல் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். கறுப்பு நிறம் கொண்ட சிலருக்கு ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் கரெக்டெர்கள் தோலில் உள்ள அடர் நிறத்தை மாற்றும். உங்களது ஒப்பனையில் அடர்த்தியான வண்ணங்களை சேர்த்து நீலம், பச்சை மற்றும் சேற்றுப் பழுப்பு நிறங்களைத் தவிர்க்கவும்.

அதே நேரம் வெண்கலம், தங்கம் மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்கள் உங்களுக்கு சிறந்த தோற்றத்தை அளிக்கும். கண்களை மெருகேற்ற மஸ்காரா மற்றும் ஐ லைனர்களை பயன்படுத்தலாம். தங்கம் அல்லது வெண்கல வண்ணங்களை கண் ரப்பைகளின் மீது பயன்படுத்தி கண்களின் ஆழத்தை குறைவாகக் காட்டலாம். எல்லோரையும் அழகாக மாற்ற முடியும்.

இந்திய சரும நிறத்திற்கு பிரவுன், பிரான்ஸ் நிறங்கள் மிகவும் உகந்தவை. உங்கள் தோற்றத்தை கொஞ்சம் எடுப்பாக்க, உங்கள் கன்னங்கள் அல்லது கண்களில் மெட்டாலிக் பிரான்ஸ் நிறத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1. உங்கள் சருமத்தின் நிறத்துடன் நன்றாக பொருந்தும் நிறத்தை சீரான ஃபவுண்டேஷனாக பூசவும்.

2. புருவங்களை நன்றாக வரைந்து, பிரஷ் செய்து கொள்ளவும்.

3. உங்கள் கன்னங்களில் பிரான்ஸரை பூசி, நன்றாக பரப்பவும்.

4. உங்கள் உதடுகளில் நியூட்ரல் கிளாஸை பூசவும்.

5. பிரவுன் மற்றும் பிரான்ஸ் நிறத்தை உங்கள் கண்களில் பூசவும். மேல் இமையில் நிறங்களை சீராக பூசி, பிரவுன் நிற மஸ்காராவை கொண்டு முடிக்கவும்.

6. உச்சியில் முடியைப் பின்னல் போட்டு, ஹெர்ரிங்போன் பின்னல்களாக செய்து கொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *