‘தோனியன்ஸ்’ உதைச்ச க்ரீஸ் டப்பா: அப்டேட் குமாரு

public

வாழ்க்கை ஒரு வட்டம்னு சொன்னாலும் சொன்னாங்க, அது இப்போ கண்ணு முன்னாடியே நடக்குது. ஆமாங்க ஆமா. மூணு மாசத்துக்கு முன்னாடி சச்சினோட பிறந்தநாள் அன்னைக்கி மும்பை இந்தியன்ஸ் டீம், ஐபிஎல்ல தோத்தாங்க. இத்தனைக்கும் அந்த மேட்சுல சச்சின் விளையாடக்கூட இல்ல; ஆனா அன்னைக்கு ஃபுல்லா சச்சினையும், ரோஹித் சர்மாவையும், மும்பை இந்தியன்ஸ் டீமையும் பல பேரு செமயாக் கலாய்ச்சாங்க. கலாய்ச்சவாங்கள்ல அதிகம் பேரு தோனி ரசிகர்கள்தான்.

அடுத்த மூணே மாசத்துல இப்போ தோனியோட பிறந்தநாள் வந்திருக்குது. கரெக்டா இந்தியா டீம் இங்கிலாந்துக்கிட்ட தோத்துருக்குது. இத்தனைக்கும் இதுல தோனி களமிறங்கி விளையாடியும் வேற இருக்குறாரு ஆனாலும் இந்தியா தோத்துருக்கு. முன்னாடி சச்சினைக் கலாய்ச்ச ஆட்கள் எல்லாம் இப்போ என்ன சொல்றதுனு தெரியாம, தலையில துண்டைப் போட்டுக்கிட்டு மாறுவேஷத்துல திரியிறாங்க. அப்போ பொறுமையா இருந்த சச்சின் ரசிகர்கள்லாம், “அந்த கிரீஸ் டப்பாவை எப்டி உதைச்ச…”ன்னு கேட்டு தோனி ஃபேன்ஸை பங்கமா கலாய்ச்சிக்கிட்டு இருக்குறாங்க. ஹ்ம்ம்… சச்சினும் தோனியும் சும்மா இருந்தாக்கூட இவங்க சும்மா இருக்க மாட்டாங்க போல…

சரி சரி நீங்க அப்டேட்டைப் பாருங்க அடுத்து என்ன ட்ரால் ஓடுதுனு பார்த்துட்டு வர்றேன்…

**@Boopathi Venkat**

கூட்டத்தில் நடக்கும் குழந்தைக்கு, நம்பிக்கையானவரின் கைவிரல்தான் எல்லாமே!

**@Karthik Venkatachalam**

காதலர்கள் தன் காதலிக்கு கவிதை எழுதும் காலம் போய் காதலியின் படத்திற்கு பாடல்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..

#VigneshshivN_Nayanthara #koko

**@Boopathi Venkat**

ரெண்டு நாள் லீவு. குறைந்தபட்சம் இருநூறு கேள்விகளாச்சும் கேட்பான் மகன். சமாளிக்கணும்!

**@BlackLightOfl**

பிறருக்கு கொடுத்து வாழும் எண்ணத்தை கெடுத்து விட்டதே, இந்த குளிர்சாதன பெட்டி எனலாம்.!!

**@Thaadikkaran**

போன் பண்ணுனா, நல்லா இருக்கியான்னு கேட்டவங்களை இப்போ நான் பேசுறது கேக்குதான்னு கேட்க வச்சிருச்சு மொபைல் நெட்வொர்க்..!!

**@Am_Jokerr**

ரஜினிகாந்தின் ’காலா’ நஷ்டம்: 40 கோடியைத் திருப்பிக் கொடுக்க தனுஷ் சம்மதம்!

ஒரே ஒரு இண்டர்வியு. மொத்த படமும் க்ளோஸ்.

**@kathir_twits**

பெற்றோர்களை குழந்தைகளுக்கு மதிய உணவிற்கும் சென்று பணிவிடை செய்ய வைத்ததே மெட்ரிக் பள்ளிகளின் சாதனை !!

**@Azhagi25QwsxKDe**

என்ன பெரிதாக கேட்டு விடப் போகிறேன் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, டேய் என்று உன் விரல் உதிக்கும் ஒற்றை வார்த்தை – குறுஞ்செய்தி

**@hiphopkarthi24**

கனவுகள் காத்திருக்கின்றன..

என்னுடைய உறக்கத்திற்காக

**@Am_Jokerr**

தனியாய் இருக்கும் எல்லோரும்,

தனிமையில் இருப்பதில்லை.

கூட்டத்தில் இருக்கும் எல்லோரும்,

கொண்டாட்டமாய் இருப்பதில்லை.

#யதார்த்தம்

**@kathir_twits**

அநேக முத்தங்களை விருப்பமின்றி தனதாக்கி கொண்டது ஆண்ட்ராய்ட் போன்கள் !!

**@ShivaP_Offl**

ஐந்து நிமிடங்களில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு,

அரை மணிநேரம் கழித்து வருபவர்களின் பரம்பரை இந்தியன் ரயில்வேயில் பணிபுரிந்து இருக்கலாம்!!

**@Vivika Suresh**

நான் ஜெயித்தால் நான் முத்தம் கொடுப்பேன்

நீ ஜெயித்தால் நீ முத்தம் கொடுக்கனும்

என விளையாடிய விளையாட்டுகளில்

தொலைந்து போயிருந்தது தோல்வி

#அடடே கவித கவித..

**@hiphopkarthi24**

கரப்பான் பூச்சி சாக்பீஸ் 20 ரூ.

சாதா சாக்பீஸ் 2 ரூபாய்க்கு வாங்கி

சொவத்துல கவிதை எழுதி வச்சேன்..

படிச்சுட்டு கரப்பான் பூச்சி செத்துருச்சு

**@AmalaJesuraj1**

உங்கள் சுயகுணங்களை உங்களுக்கு

வெளியில் நின்று பாருங்கள்!

உங்களுக்கே பிடிக்காமலும் போகலாம்!

**@selvachidambara**

உணவகங்களில் சட்டை பாக்கெட்டைத் தடவிப்பார்த்து, விலை விசாரித்துக்கொண்டே சாப்பிட்ட காலங்களில் வயிற்றில் பசி இருந்தது!!!

**@ShivaP_Offl**

மூலைமுடுக்கெல்லாம் ஸ்கூல் ஆரம்பிச்சுட்டாங்க, எந்த கலர்ல டிரஸ் போட்டுக்கிட்டு வேலைக்குபோனாலும்,

சிலபேரு எந்த ஸ்கூல்ல வாத்தியார்ன்னு கேட்கிறாங்க

சிலபேரு எந்த ஸ்கூல்ல படிக்கிறன்னு கேட்கிறாங்க

இதுபரவாயில்லை, சிலபேரு எந்த ஸ்கூல்ல வாட்ச்மேன்னு கேக்குறாங்கக மைலார்ட்

**@Kozhiyaar**

உடன் பயணிப்பவர் உறங்கி கொண்டிருக்க வண்டி ஓட்டுவது அசைவம் உண்ணா நாளில் கறி விருந்துக்கு செல்வது போன்றொரு கடுப்பு நிலை!!

**@chithradevi_91**

முன்னெல்லாம் காதலர்களின் கன்னங்கள் பெற்ற முத்தத்தை இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களே அதிகம் பெற்றுக் கொள்கின்றன

**@Thamilan143**

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் – சுப்பிரமணியன் சுவாமி

// எப்புடினே சொல்லுறீங்க ??

அவங்களுக்கு இங்க வர டிக்கெட் வாங்கி கொடுத்ததே நான் தான்

**@hiphopkarthi24**

ஒரு அஞ்சு நிமிஷம் போனை “சைலன்ட் மோட்ல” வச்சிருந்தா பத்து மிஸ்ட்டு கால் வந்திருக்கும்.

போனை “ரிங்கிங் மோட்ல” வச்சிருந்தா அஞ்சு நாள் ஆனாலும் ஒரு போன் கூட வராது

ஏன் இப்படி

**@sultan_Twitz**

திமுக, காங்கிரஸ் வெற்று கருப்பு பலூன் பறக்க விடுகிறார்கள்; மோடி நவீன ரக விமானங்களைப் பறக்க விடுகிறார்! – தமிழிசை #

அவரு எங்கம்மா விமானத்தை பறக்கவிடுறாரு அவர் தான் அதுமேல ஏறி பறந்துட்டு இருக்காரு!?

**@HAJAMYDEENNKS**

திருவள்ளூர் அருகே மீஞ்சூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக நாடகம்: இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் கைது -செய்தி #

உண்மையான நமக்கு நாமே திட்டம் !

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *