}திடீர் தாக்குதல் நடத்த யார் காரணம்? – முத்தரசன்

public

ஜல்லிக்கட்டு தொடர்பாக, சென்னை மெரினாவில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். அவர்கள்மீது திடீரென போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தரச் சட்டம் கோரி அறப் போராட்டம் நடத்தியவர்கள்மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் இன்று மதுரை, கோவை மற்றும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு தொடர்பாக அறப்போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டுவந்தாலும் அய்யப்பாடு நீங்கவில்லை. அறப்போராட்டம் நடத்தியவர்கள்மீது ஏன் போலீசார் தாக்குதல் நடத்தினர்? அவர்கள்மீது தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டம் நடத்தியவர்களை தமிழகம் முழுவதும் அதிகாலையில் போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு சம்பவத்தில் வன்முறை எதுவும் இல்லை. தோழர்கள் என்று சொல்வதை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களை தீவிரவாதிகள் என்று சொல்வதும் கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் எப்படி திடீரென தீய சக்திகள் புகுந்தனர்? போலீசார் திடீர்த் தாக்குதல் நடத்த யார் காரணம்? இதில், தமிழக அரசு, மத்திய பாஜக அரசின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்துள்ளது’ என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *