செம்மரக் கடத்தலில் சிக்கிய திமுக பிரமுகர் நீக்கம்!

public

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியச் செயலாளரான அணைக்கட்டு பாபுவை செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்ட போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவில் எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாபுவை ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி, நீக்கியிருக்கிறார் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்.

இந்தத் தகவல் தெலுங்கு நாளிதழ்களில் பரபரப்பாக எழுதப்பட்டது. கைது செய்யப்பட்ட பாபு திமுக ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வகிப்பவர். அவர் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு மிகவும் வேண்டியவர் என்றல்லாம் செய்திகள் வெளியாகின. வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பேசியபோது, “அணைக்கட்டு பாபு ஏற்கனவே செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்தான். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கிருக்கும் பல அரசியல் புள்ளிகளுக்கும் செம்மரக் கடத்தல் கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது இம்மாவட்ட மக்களுக்கு ஆச்சரியமே இல்லை” என்றவர்கள் பாபு கைதுக்குப் பிறகு திமுகவில் நடந்ததைக் கூறினார்கள்

. “அணைக்கட்டு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாபு ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்பட்டதும் அறிவாலயத்துக்கு உடனடியாகத் தகவல் சென்றது. ஆனால் அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குவதற்குச் செயல் தலைவராலேயே முடியவில்லை. பாபு தலைமைக் கழக முதன்மைக் கழகச் செயலாளர் துரைமுருகனுக்கும் அவர் மகன் கதிர் ஆனந்துக்கும் வேண்டப்பட்டவர் என்பது மாவட்டத்தில் அனைவருக்கும் தெரியும். இவர்கள்தான் பாபுவின் பதவியைப் பாதுகாக்கிறார்கள் என்று திமுகவுக்குள் சலசலப்பு எழுந்தது.

ஆனால் பாபுவை நீக்கினால்தான் மாவட்டத்தில் கட்சியின் மானத்தைக் காப்பாற்ற முடியும் என்று ஸ்டாலினுக்குத் தகவல்கள் சென்றன. இந்நிலையில்தான் பிப்ரவரி 2ஆம் தேதி அணைக்கட்டு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாபுவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, என். பிரகாஷ் என்பவரை ஒன்றியப் பொறுப்பாளராக நியமனம் செய்து முரசொலியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில்கூட, ‘ஒன்றியச் செயலாளர் நீக்கம்’ என்ற தலைப்பு வரவில்லை. ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம் என்றே வெளியானது. இதுவே பாபுவுக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டுகிறது’’என்றனர்.

திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் கருத்து வேறுபாடு நீடிப்பதாகச் சொல்கிறார்கள்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *