சுந்தர் பிச்சை பிறந்த தினம் இன்று!

public

தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையாகவும் நம் கைகளில் உலவும் கைபேசியின் நம் ரேகைகள் தேடும் கூகுள் குரோமை உருவாக்கியவருமான சுந்தர் பிச்சையின் பிறந்த தினம் இன்று.

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி கோரக்பூரில் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் (எம்.எஸ்) பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் வணிகத்தில் முதுகலைப் பட்டமும் (எம்.பி.ஏ) பெற்றவர்.

2004ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்டு, கூகுள் குரோம் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துக் கொண்டவர்.

ஆரம்பத்தில் கூகுள் குரோம் உருவாக்கும் குழுவில் இருந்தார். 2008ஆம் ஆண்டு குரோம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டின் தலைவராக வந்தவர்.

கூகுள் நிறுவனத்தில் சேரும்முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தவர் தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்டு, கூகுள் குரோம், கூகுள் இன்ஜினீயரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர்.

2008ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையிலான குழுதான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. 2013ஆம் ஆண்டு, ஆண்ட்ராய்டு பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார். ஸ்மார்ட்போன்களின் சந்தையில் ஆண்ட்ராய்டு முதன்மை இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தார்.

அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள சத்யா நாதெள்ளாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை உயர் பதவியை அலங்கரிக்கிறார்.

‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ எனும் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை வரிகள் வான், காற்று, உலகு முழுவதும் இவரால் ஒலிக்கிறது.

இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.

– வீரசோழன் க.சோ.திருமாவளவன்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *