சட்டமன்றத்தில் ஒலித்த ‘வெற்றிலை பாக்கு’ உதாரணம்!

public

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது, அண்ணா கூறிய வெற்றிலை பாக்கு உதாரணத்தை மேற்கோள்காட்டிப் பேசினார்.

‘1967ஆம் ஆண்டிலே, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியேற்றபிறகு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசியபோது, தெரிவித்த கருத்துகளை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

“கவர்னர் உரை என்பது, இந்த சர்க்கார் செய்யவேண்டிய காரியங்களையும் தொகுத்து வெளியிடுகின்ற, பெரிய அறிக்கை அல்ல. கோடிட்டு காட்டுகிற அறிக்கை. கவர்னர் உரையில் கோடிட்டுக் காட்டியிருப்பதை வைத்துக்கொண்டு அதிலிருந்து நாம் மற்றவற்றை யூகித்துக்கொள்ள வேண்டும்.

‘வெற்றிலை பாக்குப் போடுகிறீர்களா?’ என்று கேட்டால், சுண்ணாம்பு தடவாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அர்த்தமல்ல. ‘வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடுகிறீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ‘வெற்றிலை பாக்குப் போடுகிறீர்களா?’ என்றுதான் கேட்பார்கள். ‘போட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும்தான் வரும். வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவி போட்டுக் கொள்வார்கள்.

வெற்றிலை பாக்குத்தானே போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்? இதோ வெற்றிலை, இதோ பாக்கு, சுண்ணாம்பு வேண்டாம் என்று யாரும் தள்ளிவிட மாட்டார்கள். அதுபோல், கவர்னர் உரையில் இது இல்லை, அது இல்லை, ஆகவே இதில் எதுவும் இல்லை என்று தள்ளிவிடலாமா? கவர்னர் உரையில், சில குறிப்பிட்ட விஷயங்கள் இருக்கும். அதோடு தொடர்பாக நாம்தான் மற்ற விஷயங்களை யூகித்துக்கொள்ள வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா சொன்னதை உறுப்பினர்கள் நினைவில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார் .

முதல்வர் ஜெயலலிதா முன்னதாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, ‘கொள்கைக் குறிப்புகள், எதுவும் இல்லாத, வெற்றறிக்கை’ என்று கவர்னர் உரைறித்து சட்டமன்றத்துக்கு வெளியே கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, ‘கவர்னர் உரை என்பது அரசின் கொள்கையை எடுத்துக்கூறும் உரை ஆகும்’ என்று, வெற்றிலை பாக்கு உதாரணத்தோடு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *