கிச்சன் கீர்த்தனா: கேரள ஸ்பெஷல் – வெண்டைக்காய் பச்சடி

public

பச்சடி என்பது உணவின்போது தொட்டுக்கொள்ள உதவும் பக்க உணவாகப் பரிமாறப்படுகிறது. பரவலாக தென்னிந்திய மொழிகளில் பச்சடி ஒரு துரித உணவைக் குறிப்பதாகவும் உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் பச்சடியின் சுவை, கேரளாவில் தனிச்சுவையுடன் கூடியது. கேரள உணவுப் பட்டியலில் முக்கிய இடம்பிடிப்பது இந்த வெண்டைக்காய் பச்சடி.

**என்ன தேவை?**

வெண்டைக்காய் – கால் கிலோ (கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

எண்ணெய் – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கெட்டித் தயிர் – முக்கால் கப்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெண்டைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வறுத்தெடுக்கவும். பாத்திரத்தில் தயிருடன் உப்பு, வறுத்த வெண்டைக்காய் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: கேரளத்துச் சாம்பார்](https://www.minnambalam.com/k/2020/08/28/1)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *