ஒரு துளி நீர்கூட வீணாகாமல் தண்ணீரைச் சேமிக்க வேண்டும்: மோடி

public

$மன் கீ பாத் (மனதில் இருந்து) என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மக்களோடு உரையாடி வருகிறார். கோடையால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை மற்றும் நீர் சேமிப்பு குறித்து இன்றைய19-ம் மன் கீ பாத் உரையை மோடி தொடங்கினார். சொட்டுநீர்ப் பாசனமும், தெளிப்பான் பாசனமும் மிகவும் பயனுள்ளவை. அவை நீரைச் சேமிப்பதோடு உழைப்பையும் சேமிக்கிறது. மஹாராஷ்டிராவில் உள்ள அஹ்மத் நகரில் வறட்சியைச் சமாளித்து கரும்பு உள்ளிட்டவற்றைப் பயிரிடுகின்றனர். நீர்வரத்தை தடைசெய்யும் வகையில் கால்வாய்களில் ஆக்கிரமிப்பு செய்வதால் நீர்நிலைகளில் நீரின் அளவு குறைந்துள்ளது. பருவமழை 106 முதல் 110 சதவிகிதம் அளவுக்கு இந்த ஆண்டு பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், நீர் சேமிப்பைப் பொருத்தவரை நம்முன் ஒரு சவாலை இது நிலையுறுத்துகிறது. இனிமேலாவது நீர் சேமிப்பில் கவனம் செலுத்தவேண்டும். ஒரு துளி நீர்கூட வீணாகாமல் நாம் தண்ணீரைச் சேமிக்கவேண்டும். அதுதொடர்பாக நாம் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *