$ஐபிஎல் – இன்று

public

ஐபிஎல் போட்டியில் இன்று, டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரவு எட்டு மணிக்கு, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. டெல்லி அணிக்கு ஜாகீர்கானும், கொல்கத்தா அணிக்கு கவுதம் காம்பீரும் கேப்டனாக இருக்கிறார்கள். இதுவரை இரு அணிகளும் 15 முறை ஐபிஎல் போட்டியில் மோதியுள்ளன. இதில் 9 போட்டியில் கொல்கத்தாவும், 6 போட்டியில் டெல்லியும் வென்றுள்ளன. கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் போட்டியின் முக்கியத் துருப்புச்சீட்டாக இருப்பார் என நம்பப்படுகிறது. ‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நரீனின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்’ என கம்பீர் தெரிவித்துள்ளார். அதேபோல், டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர், ஆலோசகர் டிராவிட் ஆகியோரின் அனுபவம் டெல்லிக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *