ஆறு வருட பகையைத் தீர்த்துக்கொள்ளுமா அயர்லாந்து?

public

ஆறு வருடங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நடத்திய உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நினைவிருக்கிறதா? ஸ்பெயின் – நெதர்லாந்து அணிகள் விளையாடிய இறுதி ஆட்டத்தை விட அதிக பிரெஷரை ஏற்றிவிட்டது, பிரான்ஸ் – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான பிளே-ஆஃப் சுற்றில் நடைபெற்ற போட்டி. பிரான்ஸ் அணியின் கேப்டன் தியரி ஹென்றி பந்தைக் கையால் தடுத்தது, அடுத்த சில நிமிடங்களில் கோல் அடிக்கக் காரணமாக இருந்தது. அந்த கோல் அயர்லாந்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரான்ஸ் உலகக்கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவும் வழிவகுத்தது. இந்தச் செயலுக்கு பிரான்ஸைப் பழிக்குப்பழி வாங்கும் வாய்ப்பு அயர்லாந்து நாட்டுக்கு ஆறு வருடங்கள் கழித்து யூரோ கால்பந்தாட்டப் போட்டியில் கிடைத்திருக்கிறது. யூரோவின் நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியும், அயர்லாந்தும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. அயர்லாந்து அணியின் ஃபேன் கிளப் மூலம், பிரான்ஸ் செய்த அநியாயத்துக்கு இம்முறை பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் கோரிக்கையைக் கேட்ட பிரான்ஸ் மேனேஜர் மார்டின் ஓ நெய்ல் ‘பழிக்குப் பழி என்றால் வெற்றி பெறுவது தானே. வெற்றி பெற்றுவிடலாம்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *