Yகூகுள் பே மூலம் ஓட்டுக்குப் பணமா?

politics

தேர்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பது என்பது தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சியை வாக்குக்குப் பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டி வருவது தொடர் கதையாகிவருகிறது.

இந்த வகையில் திமுக கடந்த மார்ச் 17 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஒரு வித்தியாசமான புகாரைக் கொடுத்தது.

திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சாகுவிடம் 17 ஆம் தேதி அளித்த புகாரில்,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொது மக்களின் மொபைல் எண்களை சேகரித்து, கூகுள்-பே மற்றும் பிற ஆன்லைன் பண பரிமாற்ற தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு பணம் வழங்கிவருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் திமுகவுக்கு பதில் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதில்,

“உங்களது புகாருக்கு இந்தியாவின் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் படி தங்களின் கவனத்திற்கு பின் வரும் பதில் அளிக்கப்படுகிறது. வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றங்கள் குறித்து மார்ச் 9 ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது அணைத்து வங்கிகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்டது.

தினசரி 10 லட்சம் மேல் உள்ள பண பரிவர்த்தனைகளையும் மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளையும் உடனே தெரிவிக்கவும் மற்றும் சந்தேகத்திற்குரிய RTGS/NEFT பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது . மேலும், இது தொடர்பாக மாவட்ட முன்னணி வங்கி மேலாளர்கள் வழிகாட்டுதலுக்காக சென்னை ரிசர்வ் வங்கி, இந்தியா, மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் குழுவிற்கும் முறையான வழிகாட்டுதல் வழங்க தகவல் தெரிவிக்க பட்டுள்ளது . மேலும், தலைமை வங்கி மேலாளர்கள் அனைத்து வங்கியாளர்களுக்கும் இதுபோன்ற மோசமான மற்றும் சந்தேகத்திற்குரிய பண பரிமாற்ற பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால், தினசரி அடிப்படையில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள் .

மேலும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி / மாவட்ட ஆட்சியர் ஒரு தனிப்பட்ட கூட்டத்தை அனைத்து வங்கியாளர்களுடனும் மற்றும் செலவின பார்வையாளர்கள் , வருமான வரி நோடல் அதிகாரிகளுடனும் கலந்து விரிவான வழிமுறைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது,

மேலும் சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பண பரிமாற்ற பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர், யாருக்கு தொகை விநியோகிக்கப்பட்டது , எந்தக் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டது போன்ற விவரங்கள் ஏதேனும் தெரிவித்தால், தேர்தல் கமிஷனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமல்லாமல், கோவை மாவட்டத்தின் அனைத்து 10 தொகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றம் பரிவர்த்தனைகளை சரிபார்க்க முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது”என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *