வரலாறு தெரியாமல் வாரியாருக்கு அரசு விழா அறிவிப்பு? துரைமுருகன்!

politics

வேலூர் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்,10) நடைபெற்றது. அதில், திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் பங்கேற்று பேசினார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கிருபானந்த வாரியாரின் தமிழுக்கு நான் சிஷ்யன். கிருபானந்த வாரியார் இறந்த போது, ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. திருமுருக கிருபானந்த வாரியார் இறந்தபோது அதிமுக வினர் ஒருவரும் மாலை அணிவிக்கவில்லை. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் வந்ததும் திமுக தலைவர் கலைஞர் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் ‘ஞானப்பழம் ஒன்று முதிர்ந்து, உதிர்ந்து விட்டது’ என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாரியார் பிறந்தநாள் விழாவை அரசுவிழாவாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளார். இது தேர்தலுக்காக அறிவித்தது.

இந்த வரலாறு கூட தெரியாமல் இன்று அவர் வாரியாருக்கு அரசு விழா என்று அறிவித்துள்ளார்.

ஒரு முறையாவது கிருபானந்த வாரியார் மணிமண்டபத்துக்கு வந்தது உண்டா?” தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.

வரும் தேர்தல் வரை அதிமுக கட்சி இருக்குமா என தெரியவில்லை. அங்கு தலைவர் யார் என்பதே குழப்பமாக உள்ளது. ஓ.பி.எஸ் எங்கும் வரமாட்டேன் என உள்ளேயே இருக்கார் அவருக்கு என்ன திட்டம் இருக்குதோ தெரியலை.

நண்டு காலை பிடித்து இழுப்பது போல் எடப்பாடி காலை பிடித்து இழுக்கிறார்கள். இப்போது ஏதோ ஒரு பேய் வேற நடமாடுவதாக சொல்கிறார்கள்.

தியாகத்தை கேலிப்பொருளாக்கியது அதிமுக கட்சிதான். சிறையில் இருந்து வெளியே வந்தவருக்கு இப்படி ஒரு வரவேற்பு என்றால் இந்த நாடு உருப்படுமா?.

திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக கூறுகிறார் ஏன் அதிமுகவில் இல்லையா? ஓ.பி.எஸ் மகன், ஜெயகுமார் மகன், பிஎச்.பாண்டியன் மகன்கள் இல்லையா? எடப்பாடிக்கு மகன் இல்லைபோல பல்லு இருப்பவன் பட்டாணி திங்குறான்” என்று தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *