அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராக அதிமுக உறுப்பினர் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்தது. ஆனால், போட்டியின்றி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் டிசம்பர் 6ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதிமுகவில் நடைபெற்ற இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அங்கீகரிக்கக் கூடாது என்றும் கூறி ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
[இந்த வழக்கைக் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பங்கு உள்ளது என்றும், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தைச் சேர்த்தால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என்றும் கூறி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.](https://minnambalam.com/politics/2021/12/07/26/What-is-the-role-of-the-Election-Commission-in-admk-party-elections)
இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு ஓபிஎஸ், ஈபிஎஸுக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, உட்கட்சி தேர்தலில் தலையிட்டுக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
**-பிரியா**
�,