ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

politics

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மீண்டும் குறி வைத்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கை பதிவு செய்திருக்கும் சிபிஐ இன்று மே 17ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீடு அலுவலகம் மும்பையில் உள்ள சில இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிலும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

“சிதம்பரம் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். ‌‌ இந்த காலகட்டத்தில் பஞ்சாபின் மான்சாவில் உள்ள ஒரு மின் திட்டத்தில் பணிபுரிய சீன குடிமக்களுக்கு சுமார் 260 விசாக்களை வழங்கியதற்காக சிதம்பரம் சட்டவிரோதமாக ₹50 லட்சத்தைப் பெற்றதாகவும் அதை கார்த்தி சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரிலேயே பெறப்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது
.
இதன் அடிப்படையில் சென்னை மற்றும் மும்பை, ஒடிசா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ப. சிதம்பரம் 2008 மற்றும் 2012 க்கு இடையில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். விசாக்கள் வழங்குவது உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெய்டுகளுக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “சிபிஐ இதுவரை எத்தனை முறை ரெய்டு செய்தது என்ற கணக்கையே நான் மறந்துவிட்டேன். இப்படியே எத்தனை முறைதான் ரெய்டு செய்வீர்கள்? நிச்சயம் இது ஒரு சாதனைதான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்த பிறகு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் கணக்கில் இந்த ரெய்டு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியிலும் ஆங்கிலத்திலும் தனது கருத்தை பதிவு செய்துள்ள ப. சிதம்பரம்,

“இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர்.

குற்றம் சாட்டப்பட்டவராக எனது பெயர் இல்லாத எஃப்ஐஆர் ஒன்றை அந்தக் குழு எனக்குக் காட்டியது.

தேடுதல் குழு எதையும் கண்டுபிடிக்கவோ அல்லது கைப்பற்றவோ இல்லை.

இந்த தேடுதல் நடத்தப்படும் நேரம் சுவாரஸ்யமானது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்” என்று சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடைந்த நிலையில் அவர் தமிழ்நாட்டில் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இந்த ரெய்டு நடந்திருக்கிறது.

இதைத்தான் இந்த ரெய்டு நடக்கும் நேரம் சுவாரஸ்யமானது என சிதம்பரம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *