உயிர் பயம்: பாதாள அறையில் ராஜபக்சே

politics

இலங்கையின் பிரதமர் பதவியை நேற்று மே 9-ஆம் தேதி ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே இன்று மே 10ஆம் தேதி போராட்டக்காரர்களின் தாக்குதலுக்குப் பயந்து கொழும்பில் இருந்து வேகமாக வெளியேறி விட்டார்.
கொழும்பிலுள்ள ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லத்தை இன்று காலை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு பிரதான வாயில் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
இதையடுத்து ராஜபக்சேவை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியாக வெளியேற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். ராஜபக்சே அவரது இல்லத்தில் இருந்து வெளியேறுவதற்குள் அவரது அருகே சுமார் 10 பெட்ரோல் குண்டுகள் எறியப்பட்டன என்று கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் ஏறி திருகோணமலையை சென்றடைந்தனர். திருகோணமலையில் இருக்கும் கடற்படை தளபதியின் வீட்டில் பாதாள அறையில் ராஜபக்சேவின் குடும்பத்தினர் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதற்கிடையே நாங்கள் நாட்டை விட்டு எங்கேயும் ஓடவில்லை என்று ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நேற்று மே ஒன்பதாம் தேதி அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபக்சே இப்போது பிரதமர் பதவியில் இல்லாததால் அவரது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் ராஜபக்சே கடும் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *