Yரிலாக்ஸ் டைம்: இஞ்சி – புதினா சூப்!

Published On:

| By Balaji

‘இஞ்சியை கண்டால் பித்தம் அஞ்சி ஓடும்’ என்பார்கள். அதேபோல் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வரும், புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இந்த இரண்டையும் சேர்த்து இந்த இஞ்சி – புதினா சூப் செய்து ரிலாக்ஸ் டைமில் பருகுங்கள். உடனடியாக புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

**எப்படிச் செய்வது?**

புதினா ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் ஒன்று, தக்காளி ஒன்றை நறுக்கவும். காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பீட்ரூட், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர்) ஆகியவற்றை ஒரு கப் அளவுக்குப் பொடியாக நறுக்கவும். ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி, ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், தட்டிய இஞ்சி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். தண்ணீர் சற்று சுண்டியதும் அரைத்த ஓட்ஸ் அல்லது சோள மாவைச் சிறிது சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். சற்று மசித்து வடிகட்டி, மிளகுத்தூள் தூவி சூடாகப் பருகவும்.

**சிறப்பு**

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும். வாய் நாற்றம் அகலும். பசியைத் தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர இந்த சூப் பெரிதும் உதவும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share