தின்னத் தின்ன திகட்டாது சுவை… சொல்லிச் சொல்லி மாளாது பெருமை அவலுக்கு உண்டு. அவலைப் பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம். மோர் சேர்த்து சாப்பிடலாம். இப்படி பழக்கலவை, தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். ரிலாக்ஸ் டைமை ஹெல்த்தி டைமாக மாற்றலாம்.
**எப்படிச் செய்வது?**
அரை கப் சிவப்பு அவலை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நீரை ஒட்டப் பிழிந்து கொள்ளவும். ஒரு கப் புளிப்பில்லாத தயிரைக் கடைந்து வாய் அகன்ற பவுலில் சேர்த்து அதில் ஊறவைத்த அவல், அத்துடன் மாதுளை முத்துகள் இரண்டு டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வாழைப்பழம் இரண்டு டேபிள்ஸ்பூன், உலர்திராட்சை ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், வறுத்த உலர் விதை (பூசணி, வெள்ளரி விதை போன்றவை) ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.
**சிறப்பு**
அவல் எளிதில் ஜீரணமாகும். எடையைக் குறைக்க உதவும். உடனடியாக சக்தி தரும். இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும். வயிற்றுக் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கும்.
�,