கார்த்தியின் விருமன்: ரிலீஸ் எப்போது?

entertainment

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முத்தையா இயக்கியுள்ளார். ஏற்கனவே கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இவர் இயக்கினார்.
இந்தப் படத்தின், படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கடந்த 60 நாட்களாக நடைபெற்று கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. படம் குறித்து நடிகர் கார்த்தி, “என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. யதார்த்தமானவர். அவருடன் நடித்த நாட்கள் ஜாலியானவை. மீண்டும் ’விருமன்’ மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்ததில் சந்தோஷம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி” என்று கூறியிருந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கஞ்சா பூ கண்ணால’ முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த வருடம் வெளியாகும் கார்த்தியின் முதல் படம் ‘விருமன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

**- அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *