இன்னைக்கு சொகுசு மாசம் பொறக்குதாமேனு டீ குடிக்கும்போது நண்பன் ஒருத்தன் கேட்டான். என்னடா திடீர்னு இப்படி சொல்றேன்னு கேட்டதுக்கு ஆடி கார் சொகுசு கார்னா ஆடி மாசம் சொகுசு மாசம் தானேனு திருப்பிக கேட்கிறான். பப்ஜி மதன்கிட்ட உன்னை புடிச்சு கொடுத்திடுவேன்னு சொல்லி டீய பாதியிலேயே வச்சிட்டு வந்துட்டேன்
நீங்க அப்டேட் பாருங்க
**ஆதிரா**
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைப்பதே சிறு வயதின் ஆகப்பெரிய மூட நம்பிக்கை!
**ச ப் பா ணி**
உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும்,
ஏழைகள்
பெரியாஸ்பத்திரிக்கும் போவாங்க.!
**பர்வீன் யூனுஸ்**
மனிதர் உணர்ந்துக் கொள்ள இது சாதாரண கொரோனா அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது.
**amudu**
தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்.
கொரோனா 3 வது அலையும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தால் சரி.
**PrabuG**
வீரம்னா என்ன தெரியுமா.
முப்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கன்னு, போடுவாங்களோ மாட்டாங்களோன்னு பயம் இல்லாத மாதிரியே கேக்குறது..
**தர்மஅடி தர்மலிங்கம்**
தலை முடி கொட்றது சரி, அதுக்கு இந்த நரைச்ச முடியெல்லாம் கொட்டினா ஆகாதாம் நல்ல முடியே நான் கொட்டனுமாம்.?!
**மயக்குநன்**
கண்ணதாசன், கருணாநிதி, இளங்கோவன் ஆகியோரது வரிகளைக் கேட்டுத் தமிழ் கற்றவன் நான்!- கமல்.
குழப்புற மாதிரி பேசுறதைத்தான் யாருகிட்ட இருந்து கத்துக்கிட்டாருன்னே தெரியல..!
**mohanram.ko**
கோபம் இருக்கிற இடத்துல தான், மேனேஜர் இருக்கார்
**ச ப் பா ணி**
எதுவும் சில காலம்.ஆனால் அந்த சில காலம் கழிவதற்கு பல காலமாகிறது
**பழைய சோறு**
பயிரிட்ட விவசாயியை போலமழைக்காக காத்திருப்பார்
குடை வியாபாரி..!
**mohanram.ko**
ஆன்லைன் க்ளாஸ்னு குழந்தைகள், நம்ம மொபலை வாங்கியதால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் பார்க்கவே முடியல… கொரோனாவால ஒரே நன்மை இதுதான்
**Mannar & company**
அம்மாவின் “சொல் பேச்சு” கேட்டு வாழ்ந்தவங்களைவிட சின்னம்மாவின் “செல் பேச்சு” கேட்டு வீழ்ந்தவர்கள் அதிகம் அதிமுகவில்!
**சரவணன். ℳ**
தொடர்ந்தார் போல ஒரு வாரத்துக்கு பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்றால் எங்கேயாவது எலக்சன் வரப்போகுதா என்று மனசு ஆட்டோமேட்டிக்காக நினைக்குது!
**கோழியின் கிறுக்கல்**
கடன் வாங்குவதைப் பற்றி நாலைந்து பேரிடம் விசாரித்துக் கொண்டிருந்தால் நமக்குத் தெரியாமல் மனைவி ஒளித்து வைத்திருக்கும் பணம் வெளியே வர வாய்ப்பிருக்கிறது!
**balebalu**
“ஆடி போயி ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்” என்ற வசனம் கொரோனா காதுல விழாம பார்த்துக்கணும்
**-லாக் ஆஃப்**
�,”