வில்லன் டூ நண்பன், வாங்க பழகலாம்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

இன்னும் வெளியூருக்குப் போக பஸ்ஸு, ட்ரெயின் எதுவுமே விடல. ஸ்கூல் காலேஜ் எதுவும் தொறக்கல, எக்ஸாம் கூட மாத்தி வச்சிருக்காங்க. மதுப்பிரியர்களுக்குக் கூட டோக்கன் தான். ஆனாலும் எப்படிடா ரோட்ல ட்ராஃபிக்?’னு கடைக்கு காய்கறி வாங்கப் போன என் ஃபிரெண்ட் ஒருத்தன் கேட்டான். அதுக்கு கான்ஃபரன்ஸ் கால்ல இருந்த இன்னொரு நண்பன், ‘பழகிட்டு இருக்காங்க’ன்னு சொன்னான். அதுக்கு நானும், ‘ஆமா டா 2 மாசமா வீட்டுக்குள்ள படுத்தே கிடந்து இப்போ செருப்பு போட்டு வெளிய நடக்கவே பழக வேண்டி இருக்கு’னு சொன்னேன். அதுக்கு அவன், ‘அந்த பழகுறத சொல்லல டா..நான் கொரோனா கூட வாழப் பழகி கிட்டதப் பத்தி சொல்றேன். நீயும் பழகிக்கோ’ன்னு சொல்றான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் நடக்க கத்துக்கிறேன்.

**மயக்குநன்**

கொரோனாவில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க முன்மாதிரியாகச் செயல்படும் முதல்வர்!- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்.

அந்த ‘ஏழு வண்ண டோக்கன்’ வழங்கியதை வெச்சு சொல்றீங்களா பாஸ்..?!

**இதயவன்**

கொரோனா அறிகுறி இல்லை எனினும்,கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்,ஜின்க் மருந்துகளை

உட்கொள்கிறேன் ~ ட்ரம்ப்

ஏன் பாஸ் வேண்டுதலா ??

**இதயவன்**

அரசு உத்தரவுக்கு பின்னரே ஆம்னி பஸ்சேவை துவங்கும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

யோவ் யோவ் ஏன் சுத்தி வளைக்கிற அடுத்த நூற்றாண்டில் தான் இயக்குவோம்னு நேரா சொல்ல வேண்டியதுதானே?!!

**சப்பாணி**

ஒட்டகம் சுமக்கும் பல மூட்டைகளிலே, மேலே ஒரே ஒரு முட்டையை எடுத்ததும், பாரம் குறைந்து விட்டது என்று எண்ணி, படுத்திருக்கும் நிலை விட்டு எழுந்து நடக்குமாம்! பாவம்! அது அறியாது, மூட்டைகள் பல முதுகிலே இருப்பதை!

-அண்ணா

**Mohanram.ko**

பிபி, சுகர் யாருக்கும் வரக்கூடாதுன்னு பேருந்து, ட்ரெயின் எல்லாத்தையும் கட் பண்ணிட்டு நடக்க சொன்னா, குறை சொன்னா எப்படி?

**மயக்குநன்**

கொரோனா பரவலைத் தடுப்பதில் பிரதமர் மோடி திறம்பட செயல்படுவதால், அவரது செல்வாக்கு உயர்ந்து வருகிறது!- நியூயார்க் டைம்ஸ்.

அப்ப… ‘ஜி’யை கைதட்டி, விளக்கேத்தி, பூ தூவி வாழ்த்திட வேண்டியதான் போல..?!

**சப்பாணி**

மனம் போல Money பர்ஸ்

~சுத்தமா இருக்கு

**கோழியின் கிறுக்கல்**

மயிலிறகு குட்டி போடும் என்று கூறினால், “எப்படிப்பா Non living thing குட்டி போடும்!?” என்றுக் கேட்டு மகன் சிரிக்கிறார்!!

நான் லாம் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!!

**மாஸ்டர் பீஸ்**

துரோகத்தின் வலியை விட,

அந்த துரோகத்தை நியாயப்படுத்தும் வலி கொடியது!!!

**மெத்த வீட்டான்**

மனிதர்கள் எல்லாரும் முகமூடி அணிபவர்கள்தான் என கொரோனா முகத்தில் அடித்து சொல்லி இருக்கிறது !

**எனக்கொரு டவுட்டு**

மரத்தையும் வீட்டையும் அடையாளமாய் சொன்னது போயி கொரானோ வந்தவர் வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்ற அளவுக்கு ஆயிரும் போல

**சப்பாணி**

வயித்துல நெருப்பை கட்டிட்டு இருப்பவர்கள்

“அல்சர் வந்தவங்கதான்”!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share