டிக் டாக்: தமிழ் இளைஞனின் ஆன்லைன் சிலம்ப வகுப்பு!

entertainment

உலகில் தோன்றிய ஆதி மொழியான தமிழையும், நமது தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் உலகின் பல்வேறு பகுதி மக்களும் இன்று வரை வியந்து போற்றி வருகின்றனர்.

தமிழ் மொழியை விரும்பிக் கற்ற வெளிநாட்டவர்களைப் போன்றே, தமிழின் கலாச்சாரத்தையும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும் பலரும் கற்று வருகின்றனர். மேலும் தமிழரின் பண்பாட்டையும், வீரத்தையும் எடுத்தியம்பும் சிலம்பம் கற்கவும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், குவாரண்டைன் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற ஆன்லைனில் சிலம்பம் கற்பிக்கும் தமிழ் இளைஞன் ஒருவர், வெளிநாட்டினர் உட்பட அனைவரையும் கவர்ந்து வருகிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது டிக் டாக் தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றவர் கார்த்திக் ராஜா என்னும் 24 வயது இளைஞர். பொன்னேரியை சேர்ந்த இவர் கல்லூரியில் படித்துக்கொண்டே சிலம்பம் கற்பித்து வருகிறார். பல்வேறு சிலம்பப் போட்டிகளிலும் பதக்கங்களையும், பரிசுகளையும் வென்ற கார்த்திக் சிலம்ப நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் அந்த நாட்களையும் எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்று சிந்தித்தார். அவ்வாறு தோன்றிய ஐடியா தான் ஆன்லைன் சிலம்பு வகுப்பு. சிலம்பம் கற்றுக்கொள்வது நமது பாரம்பரியத்தை கட்டிக் காப்பதற்காக மட்டுமின்றி, பிறரிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் நோயிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கும் உதவி புரிகிறது என்கிறார் அவர்.

@karthick_alosin

Online silambam trainning to Japan 🇯🇵 artist ##todaytrending ##silambam ##varalaru ##onemillionaudition ##tami ##thamizhan ##master ##trending ##japan

♬ original sound – user254603

முறையாக சிலம்பம் கற்றுக்கொள்வதால் உடல் வலிமை கூடுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கார்த்திக் கூறுகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஆன்லைனில் சிலம்ப வகுப்புகளை தற்போது எடுத்து வருகிறார். அந்த வகுப்புகளில் சீனா, ஜப்பான், லண்டன் போன்ற வெளிநாட்டவர்கள் கூட ஆர்வத்துடன் சிலம்பம் கற்று வருகின்றனர். வெகு விரைவாகவே கற்றுக் கொண்டு இவரது அறிவுரைப்படி ஜப்பானியர் ஒருவர் சிறப்பாக சிலம்பம் சுற்றும் வீடியோவை டிக் டாக்கில் அவர் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் தாங்களும் சிலம்பம் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் பலரும் கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.

தங்கள் குவாரண்டைன் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிய அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

**-டிக் டாக் யூஸர்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *