பிச்சைக்காரன் 2 இயக்கும் பொறுப்பை விஜய் ஆண்டனி ஏற்க காரணம்!

entertainment

இசையமைப்பாளராக பெரிய ஹிட்களைக் கொடுத்திருந்தாலும், நடிகராக விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பெரிய ஹிட்டானது.

பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தார் விஜய் அண்டனி. ஆனால், விஜய் ஆண்டனிக்கு தயாரிப்பாளராக தோல்விப் படங்களே தொடர்ந்தது. அதனால், எக்கச்சக்க பணம் நஷ்டமானதால், தயாரிப்பே இனி வேண்டாமென முடிவெடுத்தார். அதன்பிறகு, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலேயே நடித்துவந்தார் விஜய் ஆண்டனி.

அப்படி, விஜய் ஆண்டனிநடிப்பில் கொலைகாரன், திமிரு பிடிச்சவன் படங்களெல்லாம் வெளியானது. தற்பொழுது,கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னிச்சிறகுகள், காக்கி படங்கள் உருவாகிவருகிறது.

இந்நிலையில், மீண்டும் தயாரிப்பை கையிலெடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இவருக்கு பெரிய ஹிட் கொடுத்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இப்படத்தை, தேசிய விருது வென்ற பாரம் படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஒத்துவராததால், இப்படத்திலிருந்து விலகினார்.

அதன்பிறகு, விஜய் ஆண்டனியை இயக்கிவரும் ‘கோடியில் ஒருவன்’ பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்குவார் என்று விஜய் ஆண்டனியே அறிவித்தார். இப்போது, அவரும் இயக்கவில்லை. பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்பொழுது வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆனந்த் கிருஷ்ணன் படத்திலிருந்து விலக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. என்னவென்றால், பிச்சைக்காரன் 2 படத்தை அடுத்த வருடம் துவங்குவதாக இருந்திருக்கிறது. ஆனால், உடனடியாக விஜய் ஆண்டனி துவங்க வேண்டுமென விரும்புகிறாராம். தற்பொழுது, ஆனந்த் கிருஷ்ணன் வேறு ஒரு புதிய பட வேலையில் இருப்பதால், இந்தப் படத்தை இயக்க முடியாத சூழலில் இருக்கிறாராம். அதனால், வேறு எந்த இயக்குநரையும் நம்பவும் விஜய் ஆண்டனி தயாராக இல்லை. அதனால், தானே இயக்கத்தில் இறங்கிவிடுவதென முடிவெடுத்திருக்கிறார்.

தயாரிப்பாளராக தொடர் தோல்வியில் தவிப்பதால் கடன் சுமையில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதனால், இந்தப் படம் உறுதியாக ஹிட்டாக வேண்டும். இந்தப் படமும் தோல்வியடைந்தால் விஜய் அண்டனியின் தயாரிப்பு நிறுவனத்துக்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும். அதனால், இயக்குநர் சரியாக அமைய வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

அப்படித்தான், பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பொறுப்பை விஜய் ஆண்டனியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை 2022ல் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

**-ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *