Uகொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா

entertainment

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ஏற்கனவே மான்ஸ்டர் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த ப்ரியா பவானி சங்கர், பொம்மை திரைப்படம் மூலம் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் தனுஷ் அந்தப் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எஸ்.ஜே. சூர்யா இட்ட டிவிட்டர் பதிவு ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. ப்ரியா பவானி சங்கருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், ‘ப்ரியா பவானி சங்கர் பார்ப்பதற்கு கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா கலந்தது போன்று இருக்கிறார் தானே’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்குக் கீழே பதிவிட்டவர்களில் சிலர், ‘ஆம், அப்படித்தான் தோன்றுகிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யா வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில் இந்தத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *