கார்த்திக்கு வில்லனாகும் சங்கி பாண்டே

entertainment

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார்.

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘சர்தார்’. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். அதிகாரம் கொண்ட பணக்கார பிசினஸ் மேன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரது கதாப்பாத்திரத்தின் உண்மை தன்மைக்காகவே அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாடுகளில் இவரது போர்ஷன் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ள சங்கி பாண்டே, ‘அஜர்பைஜான் நாடுகளின் கட்டிடக்கலை என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. படக்குழுவினரோடு மகிழ்ச்சியாக வேலைகளை செய்து வருகிறேன். ‘சர்தார்’ என்னுடைய முதல் தமிழ்ப்படம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இவரது கதாப்பாத்திரம் பற்றி படக்குழு கூறியிருப்பதாவது, “பணம் மற்றும் அதிகாரத்தில் வலுவாக இருக்க கூடிய ஒரு எதிர்மறை கதாப்பாத்திரமாக சங்கி பாண்டே படத்தில் இருப்பார். அதனை எடுத்துஎடுத்துக்காட்டும் விதமாகவே இந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். ஏனென்றால், நீங்கள் எவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்து செட் அமைத்தாலும் இந்த உண்மைத் தன்மை செட்டில் கிடைக்காது. இந்த நாடுகளில் உள்ள பிரம்மாண்டமான கட்டிடங்களே இதற்கு சாட்சி. கடந்த மே மாதத்தில் 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாளுக்கு மட்டும் 23-24 லட்சம் செலவானது” என்று தெரிவித்துள்ளது.

தற்போது கார்த்தி வெகேஷனில் இருப்பதால் விரைவில் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *