பிரபுசாலமன் படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின்

entertainment

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ அஷ்வின் நடிக்க இருக்கிறார்.

‘மைனா’, ‘கும்கி’ படங்களை இயக்கியவர் பிரபுசாலமன். இவரது அடுத்த படத்தில் அஷ்வின் நடிக்க இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 மூலம் பிரபலமடைந்தவர் அஷ்வின். இதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் சில தொடர்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியே அவரை பலருக்கும் கொண்டு போய் சேர்த்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது திரைப்படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதே போல, இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அஷ்வின் பேசியதும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தான், பிரபு சாலமன் இயக்கத்தில் இப்போது அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தினை Trident Arts நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடந்திருக்கிறது.

படத்தின் கதை முழுவதுமே பேருந்துக்குள் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நடிகை கோவை சரளா 90 வயது முதிர்ந்த ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அந்த பேருந்தின் நடத்துனர் கதாப்பாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறார்.

பிரபு சாலமனின் முந்தைய படங்களை போலவே இந்த கதைக்களமும் இயற்கை சார்ந்த இயல்பான கவனம் பெறக் கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு இந்த மாதம் 20ம் தேதி அதாவது நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *