lசந்தானத்துடன் நடிக்க மறுத்த ஸ்ரீதிவ்யா

entertainment

சந்தானம் நடிப்பில் கார்த்திக்யோகி இயக்கத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இப்படம் 2021 செப்டம்பர் 10 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது விமர்சன ரீதியாக படம் பாராட்டுக்களை குவித்தது.

அதனால், மீண்டும் கார்த்திக்யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவை சந்தித்து கதை சொல்ல சென்றிருக்கிறார்கள். அவரோ, கதை என்ன? அதில் தன் கதாபாத்திரம் என்ன? என்பதை பற்றி கேட்காமல் கதாநாயகன் யார்? என்று கேட்டிருக்கிறார்.

கதாநாயகன் சந்தானம் என கூறியிருக்கிறது தயாரிப்பு தரப்பு.ஆனால் ஸ்ரீதிவ்யா சந்தானத்திற்கு ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என நேரடியாகவே கூறியிருக்கிறார்.

2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா முன்னணி கதாநாயகர்களுடன் மட்டும் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக தமிழில் புதிய பட வாய்ப்புகள் இன்றி இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க மறுத்திருக்கிறார் திவ்யா.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *