நீண்ட நாள் கழித்து தொலைக்காட்சி பேட்டியில் விஜய்

entertainment

‘பீஸ்ட்’ படத்திற்காக நடிகர் விஜய் நீண்ட நாட்கள் கழித்து சன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, ரெடின், செல்வராகவன் முதன் முறையாக வில்லன் கதாப்பாத்திரம் என இந்த படத்தில் பலரும் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தில் இருந்து ‘அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி உள்ளது. இதனையடுத்து படத்திற்கான புரோமோஷன் பணிகளை ரசிகர்கள் அடுத்தடுத்து ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில், ‘பீஸ்ட்’க்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படம் வெளியான போது, அந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சும், ‘மாஸ்டர்’ பட சமயத்தின் போது அவர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்தும் மேடையில் விஜய் பேசியது, அதிக கவனத்தை பெற்றது. பொதுவாகவே, நடிகர் விஜய்யின் பட வெளியீட்டுக்கு முன்பாக அவரது ஆடியோ லான்ச் பேச்சுகள் வைரலாகும்.

அப்படிதான், ‘பீஸ்ட்’ படத்துக்கும் நடிகர் விஜய்யின் ஆடியோ லான்ச் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்ப்பார்த்து இருந்தனர். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆடியோ லான்ச் இந்த படத்திற்கு இல்லை என தகவல் வெளியானது.

சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிப்பதால் சன் டிவியில் நடிகர் விஜய் மற்றும் ‘பீஸ்ட்’ படக்குழுவின் பேட்டிக்கான படப்பிடிப்பு நேற்று முடிந்துள்ளது. இந்த பேட்டியானது அடுத்த மாதம் பட வெளியீட்டுக்கு முன்பாக 10ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகிறது. இரண்டு பாகங்களாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும், படத்திற்கு முன்பும் படம் வெளியானதுக்கு பிறகும் எனவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் கொடுக்கும் தொலைக்காட்சி பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் டீசர், டிரெயலர் ஏப்ரல் முதல் வாரத்தில் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் #WeWantBeastTeaser என்ற ஹேஷ்டேக்கினை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

**ஆதிரா**.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *