மகேஷ் பாபுவுக்கு வில்லனாக விக்ரம்?

entertainment

மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிகர் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவின் 27ஆவது படம் ‘சர்காரு வாரி பட்டா’. இந்த படத்தை மகேஷ் பாபு, 14 ரீல்ஸ் நிறுவனம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் 12ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ’சர்காரு வாரி பட்டா’ படத்திற்கு பிறகு தனது 28வது படம் குறித்தும் மகேஷ் பாபு அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார். சமீபத்தில் இதன் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதமே தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் தமனே இசையமைக்கிறார்.

இந்த படத்தில்தான் நடிகர் விக்ரம், மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடிகர் விக்ரமின் ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *