மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

மாநாடு வென்ற 4 விருதுகள்!

மாநாடு வென்ற 4 விருதுகள்!

கடந்த வருடம் வி-ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் படைப்புரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது.

கலைஞர்களுக்கு முதலில் சந்தோசம் கொடுப்பது ரசிகர்களின் கைதட்டல். தேவைக்கு அதிகமாகவே மாநாடு படத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள், திரையரங்குகளில் கைதட்டல்கள் குவிந்தன

தயாரிப்பாளருக்கும், படத்தில் சிறப்பாக நடித்த கலைஞர்களுக்கான விருதுகள் சர்வதேச சினிமாவில் மிக முக்கியமான ஒன்று. அது 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கிடைத்திருக்கிறது. இந்தப்படம் 50ஆவது நாளை கொண்டாடிவரும் நிலையில் நார்வே தமிழ்திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மாநாடு திரைப்படம் நான்கு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் 'நார்வே தமிழ் திரைப்பட விழா’ விருதுகள் அறிவிப்பு நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இதில் சிறந்த இயக்குனராக வெங்கட்பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜா, சிறந்த வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் என மாநாடு படத்தில் பணியாற்றிய நான்கு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது

இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு அவரது நீண்டகால திரையுலக கலைச்சேவையை பாராட்டி கலைச்சிகரம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை விருதுகள் கிடைத்ததன் பின்னணியில் பலரது உழைப்பு இருந்தாலும், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, பல சிரமங்களுக்கு இடையே படத்தை எடுத்து முடித்து, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியமான காரணம். நல்ல படைப்புகளை எந்த சமரசமும் இன்றி உருவாக்க முற்படும்போது இதுபோன்ற விருதுகள் தான் சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்து இது போன்ற படங்களை தயாரிக்க உந்துசக்தியாக மாறும்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

சனி 15 ஜன 2022