மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன்: பிரியா பவானி சங்கர்

entertainment

சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். வெற்றிமாறன் படம், தனுஷ் இன்ஸ்பிரேஷன், அடுத்த படம், ரிலேஷன்ஷிப் என பல கேள்விகளுக்குப் பதில் கொடுத்துள்ளார்.

திரைத்துறையில் ஒவ்வொரு நடிகருக்கும் பிடித்த இயக்குநர் என ஒருவர் இருப்பார். அந்த வகையில் பிரியா பவானி ஷங்கர் தனக்குப் பிடித்த இயக்குநராக வெற்றி மாறனை குறிப்பிட்டுள்ளார். “அவரது படங்களின் கதைகளும், அதில் வரும் உலகத்திலும் ஒரு நாள் தானும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து உணர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல, மிக பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் என பதில் கூறியுள்ளார். அவரது உழைப்பும் கடின முயற்சியுமே இந்த இடத்தில் அவர் இருக்கக் காரணம் என கூறியதுடன், தனுஷ் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கேள்வியாக, லாங் டைம் ரிலேஷன்ஷிப் சீக்கிரம் போர் அடித்து விடாதா என ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு, ‘கண்டிப்பாக போர் அடிக்கும். ஒரு உறவில் எல்லா நேரமும் மகிழ்ச்சியும், சிரிப்பும், சந்தோஷமும் மட்டுமே இருக்காது. விட்டு விட்டு போய் விடலாமா என்று கூட தோன்றும். அதெல்லாம் இல்லாமல் ஒரு உறவை தக்க வைத்து கொள்ள நம்பிக்கையும் அவ்வப்போது ஃபன்னும் இருக்க வேண்டும்’ என பதில் கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர், ‘நீங்கள் மேக்கப் இல்லாமல் நடிப்பீர்களா?’ என கேட்டதற்கு ‘என்னுடைய 80% படங்களில் நான் மேக்கப் இல்லாமல் தான் நடித்து இருக்கிறேன். இந்த மாதம் வெளியாக இருக்கும் ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தில் கூட மேக்கப் இல்லாமல் தான் நடித்திருக்கிறேன். அதனால், பயப்படாமல் பார்க்கலாம்’ என்கிறார் பிரியா.

மேலும் தன்னுடைய உள்ளாடை அளவு என்ன என ஒருத்தர் கேட்டதற்கு பதிலடி தரும் விதமாக ‘உடலில் அதுவும் ஒரு உறுப்பு தான். இப்படி நீங்கள் கேள்வி கேட்பதன் மூலம் உங்கள் கீழ்த்தரமான முகத்தைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்’ என அதிரடியாகப் பதில் கூறியுள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *