Gமாநாட்டை பாராட்டிய ஷங்கர்

entertainment

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாநாடு’. டைம் லூப் அடிப்படையில் கதை கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். படம் வணிக ரீதியாக சிலம்பரசன் இதுவரை நடித்து வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில் “வெங்கட் பிரபு புத்திசாலித்தனமாக ‘மாநாடு’ படத்தை எழுதி, இயக்கியுள்ளார். சிலம்பரசன் அசத்தியுள்ளார். எஸ்ஜே சூர்யா மார்வலஸ். யுவனின் இசை படத்தை உயர்த்துகிறது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களது சிறந்ததைக் காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவிற்குப் புதிய அனுபவமாகவும், சிறப்பான பொழுதுபோக்காகவும் உள்ளது,” எனப் பதிவு செய்துள்ளார்.

**-அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *