Nகொரோனா: இசையமைப்பாளர் மரணம்!

entertainment

‘வாண்டட்’, ‘தபாங்’, ‘ஏக் தா டைகர்’, ‘தேவி’ படங்களுக்கு இசையமைத்த பிரபலமான இசை இரட்டையர்கள் சஜீத்-வஜீத் ஆகியோரில் ஒருவரான, இசையமைப்பாளர் வஜீத் கான் கொரோனா பாதிப்பால் இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.

சஜீத்-வஜீத், இசை அமைப்பாளர்கள் இருவரும் 1998 ஆம் ஆண்டு வெளியான சல்மான் கானின் ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்கள். சல்மான் கானின் பல்வேறு வெற்றிப்படங்களான கார்வ், தேரே நாம், தும்கோ நா பூல் பேயங்கே, பார்டனர் மற்றும் மிகவும் பிரபலமான தபாங் சீரிஸ்களில் பணியாற்றிவர்கள் இவர்கள். மேலும் ரவுடி ரத்தோர், தமிழில் பிரபு தேவா நடித்த தேவி(சல் மார் பாடல்) ஆகிய படங்களுக்கும், ஐபிஎல் சீஸன் 4 தீம் மியூசிக், முக்கியமான கலை நிகழ்ச்சிகள் ஆகிவற்றுக்கும் இசை அமைத்தவர்கள் சஜீத்-வஜீத். பெரும்பாலும் துள்ளல் இசைக்கு பெயர் பெற்ற இவர்கள் முன்னணி நடிகர்களின் மாஸ் படங்களுக்கு இசை அமைப்பதில் பெயர் பெற்றவர்கள்.

இந்த இசை இரட்டையர்களுள் ஒருவரான வஜீத்(சஜீத்தின் சகோதரர்) சிறுநீரக நோய்த்தொற்றால் எழும் சிக்கல்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு இதனால் பல சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுநீரக பிரச்சினை இருந்ததால் மாற்று அறுவை சிகிச்சையும் ஏற்கனவே செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மும்பையிலுள்ள செம்பூரின் சுரானா மருத்துவமனையில் உடல் நலக்கோளாறால் அனுமதிக்கப்பட்டார் வஜீத். அவருக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை மேற்கொண்டபோது, பாசிடிவ் என வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பிலிருந்தே வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 42 வயதான இசையமைப்பாளர் வஜீத், இன்று(ஜூன் 1) அதிகாலை இறந்தார்.

இசையமைப்பாளரின் மறைவு பற்றிய செய்தி வெளியான உடனேயே, திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் டிவிட்டர் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

**பிரியங்கா சோப்ரா**

“நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு விஷயம், வஜீத் பாயின் சிரிப்பு. எப்போதும் புன்னகை புரிபவர். அவரது குடும்பத்தினருக்கும், துக்கப்படுகிற அனைவருக்கும் எனது இரங்கல்கள். நீங்கள் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கிறீர்கள்”.

**பரினீதா சோப்ரா**

வஜீத் பாய் நீங்கள் மிகச்சிறந்த, மிக மிகச்சிறந்த மனிதராக இருந்தீர்கள்! முழு இதயத்துடனும் எப்போதும் சிரிப்பீர்கள், எப்போதும் பாடுவீர்கள். அவருடனான ஒவ்வொரு இசை அமர்வும் மறக்கமுடியாததாக இருந்தது.

**சங்கர் மகாதேவன்**

இதைப் பொறுத்தவரை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! அதிர்ச்சியாக இருக்கிறது. நாம் மறுபுறம் சந்திக்கும் வரை குட் பை இனிய சகோதரரே…உங்கள் அமைதியான பயணத்திற்கான பிரார்த்தனைகள்.

**ஃபரீதூன் ஷார்யார், பத்திரிக்கையாளர்**

சோகமான செய்தி: இசை இசையமைப்பாளர் வாஜித் கான் சிறிது நேரத்துக்கு முன் காலமானார் என்பதை பிரபல பாடகர் சோனு நிகாம் எனக்கு உறுதிப்படுத்தினார். அவர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டார்.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *