மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? நாமக்கல் தொகுதியில் வெற்றிநடை போடுவது யார் ? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் மாதேஷ்வரன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்மணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.கனிமொழி போட்டியிடுகிறார்.

கொ.ம.தே.க, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்களத்தின் நிலவரம் என்ன ? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாமக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சங்ககிரி,  இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்,

கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஷ்வரன் 45% வாக்குகளைப் பெற்று நாமக்கல் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 36% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.கனிமொழி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக, நாமக்கல் தொகுதியில் இந்த முறை மாதேஷ்வரன் வெற்றி பெற்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.comவலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?

மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை… மகுடம் சூடப் போவது யார்?

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *