நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கிறவர்களுக்கு அவற்றுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்கிற விழிப்புணர்வு பரவலாக இருக்கிறது. அந்த வகையில் ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், தடுப்பூசி போட்டுவிட்டால் 100% பாதுகாப்புக் கிடைக்கும் என எண்ணி அவற்றுடன் மிக நெருக்கமாக இருப்பது தவறானது. ஏனென்றால் ரேபிஸ் தடுப்பூசி 100% பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
“நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளை என்னதான் நம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், `வாக்’ அழைத்துச் செல்லும்போது, பக்கத்து வீட்டுப் பிராணிகளுடன் சண்டையிடும்போது, விளையாடும்போது என, அது இன்னொரு விலங்குடன் எச்சில்படும் அளவுக்குத் தொடர்புகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி அது தொடர்புகொண்ட பிராணிக்கு ரேபிஸ் நோய் இருந்தால், அது அந்த எச்சில் மூலம் வளர்ப்புப் பிராணிக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.
இந்த நிலையில், செல்லப்பிராணிக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளால், அதை வளர்ப்பவர்களுக்கும் ரேபிஸ் பரவ வாய்ப்புண்டாகிவிடும்.
கூடவே, உடலில் ஏதேனும் புண் இருந்து அதை ரேபிஸால் பாதிக்கப்பட்ட வளர்ப்புப் பிராணி நக்கினால், அதன் எச்சில்பட்டால் அதன் வழியாகவும் வளர்ப்பவர்களின் உடலுக்குள் கிருமிகள் பரவி விடும்’’ என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், தொடர்ந்து…
“செல்லப்பிராணிகளுடனான நெருக்கம் உணர்வுரீதியாக மட்டும்தான் இருக்க வேண்டும், நேரடி தொடர்பு தவிர்க்கப்பட வேண்டும்.
செல்லமாக வளர்த்த பூனை நகத்தால் கீறியதால் இறந்தவர்கள் உண்டு, நாய் கடித்து இறந்தவர்கள் உண்டு.
ஆகவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பூனை கீறினாலோ, நாய் கடித்தாலோ வளர்ப்பவர்கள் ரேபிஸ் ஊசி போட்டே ஆக வேண்டும்.
வளர்ப்புப் பிராணிகள் கீறாமல், கடிக்காமல், தொற்றுப் பரவும்படியாக நக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புத்தாண்டில் பைக் ரேஸ்: 242 பைக்குகள் பறிமுதல்!